விண்ணப்பத்தில் 'கற்பு' ஏன்? மருத்துவ ஆய்வாளர் மணீஷ் புது விளக்கம் 

இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி வழங்கப்பட்ட பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி விண்ணப்பத்தில் இடம்பெற்ற கற்பு சம்பந்தமான கேள்விக்கு அதன் மருத்துவ ஆய்வாளர் விளக்கமளித்தார்.
விண்ணப்பத்தில் 'கற்பு' ஏன்? மருத்துவ ஆய்வாளர் மணீஷ் புது விளக்கம் 

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி வழங்கப்பட்ட பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி விண்ணப்பத்தில் அந்த வினோத கேள்வி இடம்பெற்றுள்ளது.

அந்த விண்ணப்ப படிவத்தில் முதலாவதாகவே திருமணம் ஆகாதவர் (bachelor), கணவனை இழந்தவர் (widower) மற்றும் கற்புள்ளவர் (virgin) என மூன்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அக்கல்லூரி மருத்துவ ஆய்வாளர் மணீஷ் மண்டல் கூறியதாவது:

எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் விதிகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். அந்த இடத்தில் கற்புள்ளவர் (virgin) என்ற கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அது திருமணம் ஆகாதவர் (unmarried) என்பதை குறிக்கும். 

எய்ம்ஸ் விண்ணப்பத்திலேயே இது மாதிரி தான் உள்ளது. அரசு விதிமுறைகள், அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளபடிதான் இந்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் மாற்றினால் நாங்களும் விண்ணப்பத்தில் மாற்றம் செய்வோம் என்று விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com