ஹெச்-1பி விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம்!

கடந்த 11 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கான நுழைவு இசைவுக்காக (ஹெச்-1பி விசா) 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
ஹெச்-1பி விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம்!

கடந்த 11 ஆண்டுகளில் அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணியாற்றுவதற்கான நுழைவு இசைவுக்காக (ஹெச்-1பி விசா) 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைப் பிரிவு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஜூன் மாதம் வரை ஹெச்-1பி விசாவுக்காக 34 லட்சம் பேர் யுஎஸ்சிஐஎஸ்-ஸிடம் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 21 லட்சம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனர்கள் அதிக எண்ணிக்கையில் ஹெச்-1பி விசாவுக்காக விண்ணப்பித்திருந்தாலும், அந்த எண்ணிக்கை வெறும் 2.9 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு அடுத்த இடங்களை பிலிப்பின்ஸ் (85,918 விண்ணப்பங்கள்), தென் கொரியா (77,359 விண்ணப்பங்கள்), கனடா (68,228 விண்ணப்பங்கள்) ஆகிய நாடுகள் வகிக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில் விண்ணப்பித்த 34 லட்சம் பேரில், 26 லட்சம் பேருக்கு ஹெச்-1பி விசா வழங்கப்பட்டது. அவர்களில் 23 லட்சம் பேர் 25 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள்.
இந்தியர்களில் பெரும்பாலானோர் (20 லட்சம் பேர்) கணினி தொடர்பான பணிகளுக்காக விண்ணப்பித்தனர்.
ஹெச்-1பி விசாக்களுக்கான விண்ணப்பங்கள் அதிகரித்தாலும், வெளிநாட்டுப் பணியாளர்களின் சராசரி ஊதியம் குறைவதற்கு மாறாக, இந்த 11 ஆண்டுகளில் அதிகரிக்கவே செய்துள்ளது.
2007-ஆம் ஆண்டில் 68,159 டாலராக (சுமார் ரூ.43 லட்சம்) இருந்த சராசரி ஹெச்-1பி விசாதாரருக்கான ஆண்டு ஊதியம், 2017-ஆம் ஆண்டில் 92,317 டாலராக (சுமார் ரூ.59 லட்சம்) உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறிப்பிட்ட அந்தக் காலக்கட்டத்தில் எத்தனை இந்தியர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்பட்டது என்ற விவரம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com