வீட்டில் தக்காளியை வைத்திருக்க அச்சமா? வந்து விட்டது தக்காளி வங்கி!

கடுமையான விலை உயர்வை சந்தித்திருக்கும் தக்காளியை வீட்டில் வைத்திருக்க பயப்பபடும் பாமரர்களின் நலனுக்காக தக்காளி வங்கியைத் திறந்துள்ளது காங்கிரஸ் கட்சி.
வீட்டில் தக்காளியை வைத்திருக்க அச்சமா? வந்து விட்டது தக்காளி வங்கி!


லக்னௌ: கடுமையான விலை உயர்வை சந்தித்திருக்கும் தக்காளியை வீட்டில் வைத்திருக்க பயப்பபடும் பாமரர்களின் நலனுக்காக தக்காளி வங்கியைத் திறந்துள்ளது காங்கிரஸ் கட்சி.

கடும் விலை உயர்வினை அடுத்து தக்காளியை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடந்தேறின. சந்தைக்கு வந்த தக்காளி லாரிகளுக்கும், தக்காளி கடைகளுக்கும் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாடுபட்டு உழைத்து சம்பாதித்து வாங்கிய தக்காளியை வீட்டில் வைத்திருக்க பயப்படும் ஏழை, எளிய மக்களுக்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவில் காங்கிரஸ் கட்சி சார்பில் தக்காளி வங்கி திறக்கப்பட்டுள்ளது.

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், காங்கிரஸ் அரசு துவக்கியிருப்பது 'ஸ்டேட் பேங்க்  ஆப் டொமாட்டோ'.

இந்த வங்கியிலும், வங்கி வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் அனைத்து வசதிகளும் அளிக்கப்படும். என்னவொரு வித்தியாசம் என்றால், மற்ற வங்கிகளில் பணம் என்பதுபோல், இங்கே எல்லாமே தக்காளிதான்.

காலை 10 மணியில் இருந்து 5 மணி வரை திறந்திருக்கும் இந்த வங்கியில், தக்காளியை நிரந்தர வைப்பில் போட்டு வைக்கலாம், லாக்கர் வசதி உண்டு, தக்காளி வங்க கடன் வசதியும் அளிக்கப்படும்.

நேற்று திறக்கப்பட்ட இந்த வங்கியில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். வீட்டில் தக்காளியை வைத்திருக்க முடியவில்லை என்றும், இங்கே லாக்கரில் பத்திரமாக வைத்திருக்கலாம் என்று வந்ததாக சிலரும், தக்காளியை கடனாக வாங்கிச் செல்ல வந்ததாக சிலரும் கூறுகிறார்கள்.

103 வயதான முதியவர் ஒருவர், தனது வாழ்நாளில் தக்காளியை பாதுகாக்க வங்கிக்கு வருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று கூறுகிறார்.

தற்போது 500 கிராம் தக்காளியை வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன். 6 மாதங்களுக்குப் பிறகு எனக்கு ஒரு கிலோ தக்காளி கிடைக்கும் என்று மற்றொரு தக்காளி வாடிக்கையாளர் கூறுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com