உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் ஒரு கிலோ தக்காளியை ரூ.10-க்கு விற்ற காங்கிரசார்!

தக்காளி விலை கட்டுக்கு அடங்காமல் பெருகி வருவதனை கண்டிக்கும் விதமாக, உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் கடைகள் அமைத்து ஒரு கிலோ தக்காளியை காங்கிரசார் ரூ.10-க்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் ஒரு கிலோ தக்காளியை ரூ.10-க்கு விற்ற காங்கிரசார்!

லக்னோ: தக்காளி விலை கட்டுக்கு அடங்காமல் பெருகி வருவதனை கண்டிக்கும் விதமாக, உத்தர பிரதேச சட்டசபை வளாகத்தில் கடைகள் அமைத்து ஒரு கிலோ தக்காளியை காங்கிரசார் ரூ.10-க்கு விற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் தற்பொழுது தக்காளி விலை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்குமுன்பு வரை கிலோ ரூ.100-க்கு அதிகமாக தக்காளி விற்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தது. இந்திய மக்களின் சமையலறைத் தேவைகளில் முக்கியமானதான தக்காளியின் விலையேற்றத்தினை கண்டிக்கும் விதமாக, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸார் வினோதமான போராட்டம் ஒன்றை இன்று நடத்தினர்.

அதன்படி சட்டசபை வளாகத்தில் சிறிய அளவில் கடைகளை உருவாக்கி, அங்கு தக்காளிகளை கிலோ ரூ10-க்கு விற்பனை செய்தனர். இந்த போராட்டம் தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சைலேந்திர திவாரி கூறியதாவது:

நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயன்படும் காய்கறியான தக்காளியினை குறைந்த விலைக்கு அவர்களுக்கு கொடுக்கும் விதமாகவே, இந்த போராட்டம் நடந்தது. அத்துடன் மத்திய அரசு பொதுமக்களுக்கு வாக்களித்தபடி 'நல்ல தினம்' என்பது இன்னம் வரவில்லை என்பதனை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் இந்த நிகழ்வு பயன்படுகிறது.

இவர் திவாரி தெரிவித்தார்.

மத்திய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் வகையில் இந்த போராட்டமானது விரைவில் மற்ற இடங்களிலும் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com