மருத்துவமனை கட்டணம் செலுத்த பிறந்த குழந்தையை ரூ.7,500க்கு விற்பனை செய்த பெற்றோர்

ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் பின்னர் பிரசவத்திற்கான மருத்துவச் செலவை செலுத்த
மருத்துவமனை கட்டணம் செலுத்த பிறந்த குழந்தையை ரூ.7,500க்கு விற்பனை செய்த பெற்றோர்


கெந்தர்பாரா (ஒடிசா): ஒடிசாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் பின்னர் பிரசவத்திற்கான மருத்துவச் செலவை செலுத்த முடியாமல், பிறந்த பெண் குழந்தையை ரூ.7500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. குழந்தையை விற்பனை செய்ய வற்புறுத்தியோர் மீது குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார்.

ரிஹாகதா கிராமத்தில் வசித்து வரும் மோஹரன்னா மற்றும் கீதாஞ்சலி தம்பதியினர், குழந்தை பெற்றுக் கொள்ள ஜூலை 30 ஆம் தேதி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றனர். எனினும் ஆஷா (ASHA) எனும் அமைப்பை சேர்ந்த பணியாளர் தனியார் மருத்துவமனையில் கீதாஞ்சலியை அனுமதிக்க உதவியுள்ளார்.

சிறப்பான மருத்துவ உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக் கொண்ட மோஹரன்னா - கீதாஞ்சலி தம்பதியினருக்கு ஆகஸ்டு 1-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதன் பின் மருத்துவ செலவுகளுக்கான கட்டணமாக ரூ.7,500 செலுத்த மருத்துவமனை நிர்வாகம் மோஹரன்னாவிடம் கேட்கப்பட்டது.

மேலும் கட்டணம் செலுத்தாமல் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததைத் தொடர்ந்து மருத்துவமனை அதிகாரி ஏற்பாடு செய்த ஒடிசா மாநிலத்தின் கெந்தர்பாரா மாவட்டத்தில் உள்ள குழந்தையில்லா தம்பதிக்கு பெண் குழந்தையை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என மோஹரன்னா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தையான நிராக்கர் மோஹரன்னா, குழந்தையை விற்று கட்டணத்தை செலுத்த மருத்துவமனை ஊழியர் கட்டாயப்படுத்தியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து கெந்தர்பாரா காவல்நிலைய காவல் அதிகாரி கூறுகையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து எந்தவித பதிலும் இதுவரை அளிக்கவில்லை. மருத்துவமனை நிர்வாகம் மீது ஐடிசி பிரிவு 372 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

மேலும், குழந்தையை வாங்கியவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்பொழுது குழந்தையை காப்பாற்றுவதுதான் முதன்மையான நோக்கம். அதன்பின்பு மற்ற குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல் அதிகாரி பிஜோய் குமார் பிஷி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com