குடியரசு துணைத் தலைவருக்கான மாதிரி தேர்தலில் 16 செல்லாத ஓட்டுகள்: அமித் ஷா கவலை

குடியரசு துணைத் தலைவருக்கான மாதிரி தேர்தலில் 16 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செல்லாதவையாக இருந்தது குறிது அக்கட்சியின் தேசியச் செயலர் அமித் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவருக்கான மாதிரி தேர்தலில் 16 செல்லாத ஓட்டுகள்: அமித் ஷா கவலை


புது தில்லி: குடியரசு துணைத் தலைவருக்கான மாதிரி தேர்தலில் 16 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகள் செல்லாதவையாக இருந்தது குறிது அக்கட்சியின் தேசியச் செயலர் அமித் ஷா கவலை தெரிவித்துள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து பயிற்சி பெற, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது.

அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வழிகாட்டினர். அவ்வாறு வழிகாட்டியும் 16 வாக்குகள் செல்லாதவையாக இருந்தன.

அவர்களுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பளிக்கப்பட்டு, மிகக் கவனமாக வாக்களிக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இது குறித்துக் கருத்துக் கூறிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் நடைமுறைகளை சரியாகப் பின்பற்றி மீண்டும் இதுபோன்ற தவறு நிகழாமல் கவனமாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 21 செல்லாத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com