சுதந்திர தின விழாவில் எந்த சேலை அணிவது? டிவிட்டரில் உதவி கேட்கும் அமெரிக்க பெண் தூதர்

இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் போது எந்த சேலையை அணிவது என்று முடிவு செய்ய தனக்கு உதவுமாறு இந்தியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் டிவிட்டர் வாசகர்களை யோசனை கேட்டுள்ளார்.
சுதந்திர தின விழாவில் எந்த சேலை அணிவது? டிவிட்டரில் உதவி கேட்கும் அமெரிக்க பெண் தூதர்


புது தில்லி: இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் போது எந்த சேலையை அணிவது என்று முடிவு செய்ய தனக்கு உதவுமாறு இந்தியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் டிவிட்டர் வாசகர்களை யோசனை கேட்டுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக புது தில்லியில் பணியாற்றும் மேரிகே கார்ல்ஸன், இந்தியாவின் 70வது சுதந்திர தின விழாவில், இந்தியாவின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான சேலையை அணிந்து வர விரும்பினார்.

அதற்காக அவர் சேலை விற்பனைக் கடைக்குச் சென்ற போதுதான் சிக்கல் ஆரம்பித்தது. பட்டில் இருந்து பனாரஸ் வரை ரகரகமான புடவைகளைக் காண்பித்ததில் அனைத்துமே பிடித்துப் போக, அதில் 4 ரகங்களை தேர்வு செய்துள்ளார். இதில், ஜம்தாரி வகை புடவையா அல்லது காஞ்சிவரம் சேலையா, துஸ்ஸார் ரக சேலையா என எதை அணிந்து கொண்டு சுதந்திர விழாவில் பங்கேற்பது என்று குழப்பம்.

அதற்கு விடை காண, அவர் தேர்வு செய்திருக்கும் 4 ரக ஆடைகளையும் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து அதனை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த நான்கில் எந்த சேலையை அணிந்து வரலாம் என்று டிவிட்டர் வாசிகளை யோசனையும் கேட்டுள்ளார்.

பல முக்கியப் பிரமுகர்களும், ஆடை வடிவமைப்பாளர்களும், பொதுமக்களும் என அனைவரும் தங்களுக்குப் பிடித்த புடவைக்கு வாக்களித்து வருகின்றனர். இதில் குழப்பம் தீருமா அல்லது மேலும் குழம்புமா என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com