ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கண்டனம்
ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ராகுல் காந்தியின் கார் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனநாயக நாட்டில் அரசியல் வன்முறைக்கு இடமில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத் அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 'ராகுல் காந்தியின் கார் அணிவகுப்பு மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை முதல்வர் ரூபாணி கடுமையாக கண்டித்துள்ளார். இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டுரையில் விஜய் ரூபானி வெளியிட்டுள்ள பதிவுகளில், புகைப்படத்துக்காக இது நடந்துள்ளதென்றும், ராகுல் காந்தியை நிரந்தர சுற்றுலாப் பயணி என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நிரந்தர சுற்றுலாப் பயணியான ராகுல் காந்தி, குஜராத்துக்கு வந்துள்ளார். ஆனால், அவரிடம் குஜராத் மக்கள், இக்கட்டான இந்த நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எங்கே உள்ளனர் என்று கேட்டுள்ளனர். புகைப்படத்துக்காக இதுபோன்ற செயலை நடத்தியிருப்பதற்கு பதிலாக, ராகுல் காந்தியும், காங்கிரஸும், வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். ராகுல் காந்தியின் தலைமை பண்பு, அவரது கட்சித் தொண்டர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவரைப் பின்பற்றி, காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தற்போது விடுமுறை மனநிலையில் உள்ளனர். காங்கிரஸின் அரசியல் தந்திரங்கள் குறித்து குஜராத் மக்களுக்கு நன்குத் தெரியும். காங்கிரஸின் மக்கள் விரோதப் போக்கும், குஜராத் விரோதப் போக்கும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் என்று சுட்டுரைப் பதிவுகளில் ரூபானி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com