ஜியோவின் தாக்கம்: அதிரடி ப்ரீ-பெய்ட் திட்டத்தை அறிவித்தது ஏர்டெல்

ஜியோ அதிரடி சலுகைகளால் ஆட்டம் கண்டிருக்கும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோவின் தாக்கம்: அதிரடி ப்ரீ-பெய்ட் திட்டத்தை அறிவித்தது ஏர்டெல்


புது தில்லி: ஜியோ அதிரடி சலுகைகளால் ஆட்டம் கண்டிருக்கும் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க புதிய அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது, ரூ.399க்கு 84 நாட்கள் வாலிடிட்டியுடன், 84 ஜிபி வழங்கும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் அறிவித்திருக்கும் இந்த ப்ரீ-பெய்ட் திட்டம் 4ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்றும், ஏர்டெல் அறிவிக்கும் வேறு எந்த திட்டத்துடனும் இந்த திட்டம் சேர்க்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஏர்டெல்லின் இந்த ரூ.399 திட்டத்தில், அளவற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகளும், 84 ஜிபி டேட்டா (நாள் ஒன்றுக்கு 1 ஜிபி) வசதியும் அடங்கும்.  இதில், ஒரு ஒரு வாரத்துக்கு 1000 விநாடிகள் இலவச அழைப்பு அளிக்கப்படும். அதற்கு மேல் ஏர்டெல் - ஏர்டெல் அழைப்புக்கு ஒரு விநாடிக்கு 0.10 பைசாவும், இதர தொலைத்தொடர்பு நிறுவன அழைப்புக்கு 0.30 பைசாவும் கூடுதலாக வசூலிக்கப்படும்.

தற்போது ஏர்டெல் அறிவித்திருக்கும் இந்த திட்டமானது, கிட்டத்தட்ட ஜியோ திட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com