2018 பொதுத்தேர்தலில் சர்வதேச பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது கட்சி போட்டி

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2018-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சர்வதேச பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது கட்சி போட்டியிடுவதாக திங்கள்கிழமை அறிவித்தது.
2018 பொதுத்தேர்தலில் சர்வதேச பயங்கரவாதி ஹஃபீஸ் சயீது கட்சி போட்டி

உலக நாடுகளால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவன் ஹஃபீஸ் சயீது. இவனுடைய ஜமாத்-உத்-தாவா அமைப்பு பல்வேறு உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் 2008-ல் மும்பை ஹோட்டலில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது உட்பட இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கராவத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையவன் ஆவான். 

ஹஃபீஸ் சயீது, மில்லி முஸ்லீம் லீக் என்ற கட்சியை பாகிஸ்தானில் நடத்தி வருகிறான். இந்நிலையில், வருகிற 2018-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தக் கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சைஃபுல்லா காலித் என்பவர் கூறியதவாது: 

பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடுகிறது. 1973-ம் ஆண்டு குர்ரான் மற்றும் சுன்னா என்ற கலாசார அடிப்படையைக் கொண்டு ஆட்சி முறை நடத்துவோம்.

இது அனைத்து தரப்பினருக்கும் ஏதுவாக இருக்காது. ஆனால் எங்கள் கொள்கையானது இஸ்லாமிய ஆட்சி முறையாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com