சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருப்பதி கோவில் நடை திறப்பு

சந்திர கிரகணத்தையொட்டி, நேற்று மாலையில் மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில் இன்று அதிகாலை பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது.

சந்திர கிரகணத்தையொட்டி, நேற்று மாலையில் மூடப்பட்டிருந்த திருப்பதி கோயில் இன்று அதிகாலை பக்தர்களின் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டது.

சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாளை மாலை 4.30 மணி முதல் மறுநாள் (ஆக. 8) காலை 7 மணி வரை கோவிலில் உள்ள மகாதுவாரம் உள்பட அனைத்து நடைகளும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், நடைகள் மூடப்படும் நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாது. மேலும் லட்டு பிரசாதம், அன்னதான திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்படும். இதையடுத்து 8 ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் நடை திறக்கப்படும். பக்தர்களின் தரிசனத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

நடை திறக்கப்பட்ட பின்னர் பக்தர்கள் வழக்கம்போல கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். மேலும் நேற்று கருட சேவை உட்பட எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது” என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 10.52 மணி ஏற்பட்ட சந்திரகிரகணம் 12.48 மணிக்கு முடிந்தவுடன் நேற்று மாலை 4 மணியளவில் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை இன்று அதிகாலை 2 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் பெருமாளை சேவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com