நாங்கள் காஷ்மீர் அல்லது உத்தராகண்டுக்குள் நுழைந்தால் என்ன செய்வீர்கள்? இந்தியாவுக்கு சீனா கேள்வி

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை என்பது நிச்சயம் சாத்தியமில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால், நாங்கள் திறனற்றவர்கள் என்று எங்கள் நாட்டு மக்கள் நினைப்பார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.
file photo
file photo


பெய்ஜிங்: இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை என்பது நிச்சயம் சாத்தியமில்லை. அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தினால், நாங்கள் திறனற்றவர்கள் என்று எங்கள் நாட்டு மக்கள் நினைப்பார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவும் இந்த சூழ்நிலையில், சீனாவுக்கான எல்லை மற்றும் கடற்பகுதி விவகாரத் துறை அமைச்சகத்தின் துணைப் பொது இயக்குநர் வாங் வென்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து இந்தியா - சீனா என இரண்டு படைகளுமே ஒரே நேரத்தில் வாபஸ் பெற வேண்டும் என்ற இந்திய கோரிக்கையை நிராகரித்துள்ள சீனா, எங்கள் படையினர், காஷ்மீர் அல்லது உத்தராகண்டின் கலபானி பகுதிக்குள் நுழைந்தால் புது தில்லி என்ன செய்யும் என்றும் வாங் வென்லி கேள்வி எழுப்பினார்.

டோக்லாம் எல்லைப் பகுதியில் அத்துமீறி சாலை அமைக்க முயன்ற சீன முயற்சியை முறியடித்தது இந்தியப் படை. இதையடுத்து, கடந்த 50 நாட்களாக இந்திய - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாட்டுப் படைகளும் நிறுத்தப்பட்டிருக்கிறது. 

எங்கள் எல்லைப் பகுதியில் சாலை அமைப்பதை, இந்தியப் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளது என்றும் சீனா குற்றம்சாட்டுகிறது.

மேலும், டோக்லாம் பகுதி தங்களுடையது என பூடான் சொந்தம் கொண்டாடும் நிலையில், சீனாவும் தன்னுடையது என உரிமை கொண்டாடுகிறது.

டோக்லாம் பகுதியில் ஒரே ஒரு நாள் ஒரு ஒரு இந்திய வீரர் நின்றிருந்தாலும், அது எங்கள் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவே அர்த்தமாகும். எல்லையில் இருந்து இந்திய படைகள் திரும்பப் பெறப்படும் வரை பேச்சுவார்த்தைக்கு சாத்தியமே இல்லை என்றும் வாங் வென்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com