உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி நியமனத்தை எதிர்த்து வழக்கு: அவசரமாக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, அவசரமாக விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கேஹரின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவிருப்பதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கை வெளியிட்டது. இவர், நாட்டின் 45-ஆவது தலைமை நீதிபதி ஆவார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டதற்கு எதிராக, பஞ்சாப் மாநிலம், ஃபதேபூர் சாகிப் மக்களவைத் தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஹரீந்தர் சிங் கல்சா, தில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், மிஸ்ராவுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாக ஹரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று ஹரீந்தர் சிங் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்காத நீதிபதிகள், வழக்கமான நடைமுறையின்படி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களுக்கு ஹரீந்தர் சிங் பேட்டியளிப்பது முறையற்றது என்று நீதிபதிகள் தெரி
வித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com