சைகை மொழியில் தேசிய கீதம்: விடியோ வெளியிட்டது அரசு

சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தின் விடியோவை மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே வியாழக்கிழமை வெளியிட்டார்.
சைகை மொழியில் தேசிய கீதம்: விடியோ வெளியிட்டது அரசு

சைகை மொழியில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கீதத்தின் விடியோவை மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே வியாழக்கிழமை வெளியிட்டார்.
சுமார் 3.35 நிமிடம் ஓடக்கூடிய இந்த விடியோவை பிரபல திரைப்பட இயக்குநர் கோவிந்த் நிஹலானி இயக்கியுள்ளார். இதில் தில்லி செங்கோட்டையின் பின்னணியில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும், மாற்றுத் திறனாளி குழந்தைகளும் சைகை மொழியில் தேசிய கீதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த விடியோவை மத்திய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
சைகை மொழியைச் சார்ந்துள்ளோருக்காக தேசிய கீதம் தயாரிக்கப்பட்டது எங்களுக்குப் பெருமிதமான தருணமாகும். இந்தப் பிரிவில் வருவோரை நாம் ஊனமுற்றோர் என்று குறிப்பிட்டு வந்தோம். ஆனால் அதை மத்திய அரசு, மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியது.
இது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வைச் சுலபமாக்கும் முயற்சிகளில் ஒன்றாகும். இந்தியா என்பது புராதனமான நாடாகும். இங்கு பண்டைக்காலம் தொட்டே சைகை மொழி பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றார் அவர்.
இந்த விழாவில் இந்தியா மற்றும் பூடானுக்கான ஐ.நா. தகவல் மையத்தின் இயக்குநர் டெரக் சாகர், பாஜக செய்தித் தொடர்பாளர் சுதேஷ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தில்லியைப் போலவே கோவா, போபால், சண்டீகர், கோலாப்பூர் ஆகிய நகரங்களிலும் இந்த விடியோ வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com