பாக். புதிய பிரதமருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாகிஸ்தானின் புதிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஷாஹித் காகான் அப்பாஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட ஷாஹித் காகான் அப்பாஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல், அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆஸிஃப்க்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் அமைதியைப் பேண வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சுஷ்மா ஸ்வராஜ் அனுப்பிய செய்தியில், வன்முறை, பயங்கரவாதம் ஆகியவை இல்லாத நல்லுறவை இந்தியாவுடன் பாகிஸ்தான் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
உரி தாக்குதல், எல்லையில் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் ஆகியவற்றால் இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பனாமா ஆவணக் கசிவு விவகாரம் தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபிடம் இருந்து பாகிஸ்தான் பிரதமர் பதவியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் பறித்தது. அதைத் தொடர்ந்து, இடைக்கால பிரதமராக ஷாஹித் காகான் அப்பாஸி நியமிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com