ஐஏஎஸ் அதிகாரி உ.பி.யில் தற்கொலை

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டது.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பு கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பாக, காவல் துறைக் கண்காணிப்பாளர் எச்.என்.சிங், வெள்ளிக்கிழமை கூறியதாவது: தண்டவாளத்தில் இறந்து கிடந்தவர், பிகார் மாநிலம், பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர் முகேஷ் பாண்டே ஆவார். அவரது உடல், காஜியாபாத் ரயில் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில், வியாழக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்பட்டது. அதில், ''வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால், வாழ்வதில் நம்பிக்கை இழந்துவிட்டேன். எனவே, தில்லி சாணக்யபுரியில் உள்ள கட்டடம் ஒன்றின் 10-ஆவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது விரிவான கடிதம், தில்லியில் 5 நட்சத்திர ஹோட்டலின் 742-ஆவது அறையில் உள்ளது. என்னை மன்னித்து விடுங்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் பாண்டே எந்த நேரத்தில், எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை. அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இது தொடர்பாக, தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது: முகேஷ் பாண்டே, தற்கொலை செய்து கொள்வதற்காக, மேற்கு தில்லியில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்குச் சென்றிருப்பதாக, அவரது நண்பர்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்தனர். அதன்படி, சம்பந்தப்பட்ட வணிக வளாகத்துக்குச் சென்று தேடிப் பார்த்தபோது, அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அங்குள்ள கண்காணிப்புக் காமிராவில் பதிவான காட்சிகளில் இருந்து, அவர் அந்த வணிக வளாகத்தில் இருந்து வெளியேறி, அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி சென்றது தெரியவந்தது. அதன் பிறகும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்தது என்றார் அந்த மூத்த அதிகாரி.
நிதீஷ் இரங்கல்: இதனிடையே, முகேஷ் பாண்டேவின் மறைவுக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com