இமாச்சல் நிலச்சரிவில் 15 பேர் பலி; நரேந்திர மோடி இரங்கல்: ரூ.5 லட்சம் இழப்பீடு

இமாச்சலப்பிரதேசம் மாண்டிய பகுதியில் நிலச்சரிவில் பஸ்கள் சிக்கி 15 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி
இமாச்சல் நிலச்சரிவில் 15 பேர் பலி; நரேந்திர மோடி இரங்கல்: ரூ.5 லட்சம் இழப்பீடு

புதுதில்லி: இமாச்சலப்பிரதேசம் மாண்டிய பகுதியில் நிலச்சரிவில் பஸ்கள் சிக்கி 15 பேர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக மாண்டி -பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்றிரவு இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் சுமார் 800 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அவற்றில் சுமார் 50 பயணிகள் இருந்ததாக இன்று காலை தகவல் வெளியானது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்பு மற்றும் நிவாரணப் படையினர், நிலச்சரிவுகளில் சிக்கி இருந்து நான்கு பேரை மீட்டுள்ளதாகவும் காயமடைந்ந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்று வந்த மீட்பு பணியில் இதுவரை 15 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இந்த கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள இரங்கள் செய்தியில், இந்த கோர விபத்தில் பல உயிர்கள் பலியானதை அறிந்து வேதனை அடைந்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைய நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர் வீரபத்ர சிங் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு விரைவுப்படுத்தி உள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு மாநில அரசின் சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com