இறக்குமதி சர்க்கரை மீதான வரியை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

""நமது நாட்டில் போதிய அளவு சர்க்கரை உள்ளது; ஆதலால், சர்க்கரை மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை'' என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி சர்க்கரை மீதான வரியை ரத்து செய்யும் திட்டமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்

""நமது நாட்டில் போதிய அளவு சர்க்கரை உள்ளது; ஆதலால், சர்க்கரை மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை'' என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
2016-17ஆம் ஆண்டு சீசன் காலக்கட்டத்தில் 27.9 மில்லியன் டன் சர்க்கரை விநியோகம் உள்ளது. இதில், தற்போது இருப்பு இருக்கும் 7 மில்லியன் டன் பழைய சர்க்கரை மற்றும் தற்போது உற்பத்தி செய்யப்பட்ட 20.4 மில்லியன் டன் சர்க்கரை, இறக்குமதி செய்யப்பட்ட 5 லட்சம் டன் சர்க்கரையும் அடங்கும்.
வரும் அக்டோபர் மாதம் முதல் புதிதாக பயிரிடப்படும் பயிர்களில் இருந்து சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டு வரும் வரையிலும், இவையே நமது தேவையை பூர்த்தி செய்வதற்கு போதுமானதாகும். அதாவது, நமது நாட்டின் சர்க்கரை தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு, உள்நாட்டில் போதிய சர்க்கரை இருப்பு உள்ளது.
அதுமட்டுமன்றி, சந்தைக்கு புதிய சர்க்கரை விரைவில் வரும் வகையிலும், சர்க்கரை விலையை தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வகையிலும், கரும்புகளைப் பிழியும் பணியை சீக்கிரம் தொடங்கும்படி சர்க்கரை ஆலைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கெனவே வரியின்றி 5 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதை மேலும் தொடருவதற்கு திட்டமில்லை. சர்க்கரை விலை தற்போது ஸ்திரமான நிலையில் உள்ளது. பண்டிகை காலங்களிலும் இதேநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோதுமை மீதான வரி உயர்த்தப்பட மாட்டாது: இதேபோல், கோதுமை மீது தற்போது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக உயர்த்தும் திட்டமும் மத்திய அரசுக்கு கிடையாது. 2016-17ஆம் ஆண்டில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்த காரணத்தினால், சந்தையிலும் கோதுமை விநியோகம் சீராக உள்ளது என்றார் பாஸ்வான்.
நமது நாட்டின் மொத்த சர்க்கரை தேவையின் அளவு, ஒரு மாதத்துக்கு 2 முதல் 2.5 மில்லியன் டன் ஆகும். அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ள நடப்பு சீசனில் சர்க்கரை உற்பத்தியானது, 20.4 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் உற்பத்தி அளவான 25.1 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் சுமார் 1 டன் குறைவான அளவாகும்.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் சர்க்கரை மீது விதிக்கப்படும் வரி 50 சதவீதமாக கடந்த மாதத்தில் உயர்த்தப்பட்டது. கோதுமை மீது 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com