தில்லி வாடிக்கையாளருக்கு ரூ.1.86 லட்சத்துக்கு மாதக் கட்டண ரசீது அனுப்பிய தனியார் செல்லிடப் பேசி நிறுவனம்

தில்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, தனியார் செல்லிடப் பேசி நிறுவனம் ஒன்று, மாதாந்திர கட்டணமாக ரூ.1.86 லட்சத்துக்கு ரசீதை (பில்) அனுப்பியுள்ளது.

தில்லியைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, தனியார் செல்லிடப் பேசி நிறுவனம் ஒன்று, மாதாந்திர கட்டணமாக ரூ.1.86 லட்சத்துக்கு ரசீதை (பில்) அனுப்பியுள்ளது.
தில்லியைச் சேர்ந்த நிதின் சேதி என்ற அந்த நபர், துபைக்கு அண்மையில் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது தாம் பயன்படுத்தும் செல்பேசி எண்ணுக்குரிய தனியார் செல்லிடப் பேசி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, வெளிநாட்டு அழைப்பு வசதியை (இன்டர்நேஷனல் ரோமிங்) 10 நாள்களுக்கு மட்டும் கேட்டு பெற்றுள்ளார். பின்னர் துபையில் இருந்து அவர் திரும்பி வந்தபிறகு, அந்த வசதி நிறுத்திக் கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், அந்த செல்லிடப் பேசி நிறுவனத்திடம் இருந்து, நிதின் சேத்திக்கு கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 7ஆம் தேதி வரையிலான காலகட்டத்துக்குரிய மாதாந்திர கட்டணத்துக்கான ரசீது அனுப்பப்பட்டுள்ளது. அதில், மாதாந்திர கட்டணமாக ரூ.1.86 லட்சம் என்று தொகை குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிதின் சேத்தி, சமூக வலைதளம் மூலம் அந்த நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட செல்லிடப் பேசி நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்ப காரணத்தினால், அந்தத் தவறு நிகழ்ந்துள்ளதை ஒப்புக் கொண்டு, அதை சரி செய்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இருந்தபோதிலும், நிதின் சேத்தி, இந்த ரசீது குறித்த தகவலை பிரபல ஆங்கில வார இதழுக்கு தெரிவித்தார். மேலும், தனியார் செல்லிடப் பேசி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ரசீது நகலையும் நிதின் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன்பிறகே, இந்த விவரம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com