ராணுவம் மீது விமர்சனம்: மத்திய அமைச்சர் கண்டனம்

நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீதான விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்புப் படைகள் மீதான விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடும் கண்டனம் தெரிவித்தார். உலகிலேயே அதிக அளவில் விமர்சனங்களை எதிர்கொள்வது இந்தியாவின் பாதுகாப்புப் படைகளாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் வடிவமைக்கப்பட்ட "ஐசிஜி செளரியா' கப்பலை, இந்திய கடலோர காவல் படைக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, பனாஜியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, கடலோர காவல் படைக்கு அந்தக் கப்பலை அர்ப்பணித்த பிறகு தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. முதலில் அரசியல் தலைவர்கள் மட்டும் விமர்சனத்துக்குள்ளானார்கள். தற்போது, ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, எல்லைப் பாதுகாப்புப் படை என அனத்துப் பாதுகாப்புப் படைகளும் விமர்சனத்துக்குள்ளாகின்றன.
நமது பாதுகாப்புப் படை வீரர்கள், வெவ்வேறு இக்கட்டான சூழல்களில், கடும் சிரமங்களுக்கு மத்தியில் இயங்குகிறார்கள். ஆனால், அவர்களின் தியாகங்களைப் பற்றிய சரியான புரிதலின்றி அவர்களை மக்கள் விமர்சிக்கிறார்கள். நாம் நமது வீட்டில் இரவில் நிம்மதியாக உறங்கும் அளவுக்கு, தினந்தோறும் தங்களது உயிரைப் பணயம் வைத்து, அபாயகரச் சூழலில், ராணுவ வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ராணுவ வீரர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அவர்களுக்கு மதிப்பளிக்காமல் இருப்பது துரதிருஷ்டவமாசனது. அவர்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அது நியாயமானதாக இருக்க வேண்டும் என்றார் தர்மேந்திர பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com