வரி வருவாயைக் கொண்டே ஜிஎஸ்டி விகிதங்களை சீரமைக்க முடியும்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில், வரி வருவாய் விவரங்களை அடிப்படையாகக் கொண்டே வரி விகித நிர்ணயங்களை சீரமைக்க முடியும் என்று மத்திய நிதி மற்றும்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையில், வரி வருவாய் விவரங்களை அடிப்படையாகக் கொண்டே வரி விகித நிர்ணயங்களை சீரமைக்க முடியும் என்று மத்திய நிதி மற்றும் நிறுவன விவகாரங்களுக்கான இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:
ஜிஎஸ்டியை அறிமுகம் செய்வதற்கு முன்னர் நாடு முழுவதும் 80 லட்சம் வர்த்தகர்களே அதற்காகப் பதிவு செய்திருந்தனர். அவர்களில் அதிகபட்ச அளவாக மேற்கு வங்கத்தில் 56,000 பேர் பதிவு செய்திருந்தனர். தற்போது ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக பதிவு செய்துள்ள
வர்த்தகர்களின் எண்ணிக்கை 13.2 லட்சமாக உயர்ந்துள்ளது.
இந்த வரி விதிப்பில் வரக் கூடிய வருவாய் விவரங்களை அடிப்படையாகக் கொண்டே, பூஜ்யம், 5, 12, 18, 28 ஆகிய வரி விகிதங்களுக்குரிய பொருள்கள் மற்றும் சேவைகளின் பட்டியலை சீரமைக்க முடியும். ஜிஎஸ்டி}யைப் பொருத்தவரை வர்த்தகர்களுக்கு அது புதிது என்பதால் சற்று குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலை போகப் போகச் சரியாகிவிடும். இத்தனை சிரமங்களும் கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கே ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com