கோரக்பூர் சம்பவம்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை: காங்கிரஸ் வலியுறுத்தல்

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் அரசு மருத்துவமனையில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் செர்கில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும், தவறான நிர்வாகம், கவனக்குறைவு போன்ற காரணத்தினாலேயே உயிரிழந்துள்ளன. மாநிலத்தை ஆளும் பாஜக அரசு தெரிவிப்பது போல, நோய் காரணமாக உயிரிழக்கவில்லை. இந்த உயிரிழப்புகளுக்கு, மாநில முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர், அந்த மருத்துவமனை முதல்வர் ஆகியோரே பொறுப்பாவர். உத்தரப் பிரதேச அரசின் கரங்கள் ரத்தம் படிந்துவிட்டது. ஆனால், தற்போது அவர்கள், அதை மூடிமறைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
மாநில தலைமைச் செயலர் நிலையில் விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருப்பது கண்துடைப்பு நடவடிக்கையாகும். உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், அந்த சம்பவம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். எவ்வாறு ஒரு குற்றவாளியே, தனக்கு எதிராக விசாரணை நடத்த முடியும்? என்றார் ஜெய்வீர் செர்கில்.
கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 5 நாள்களில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்தன. இதற்கு அந்த மருத்துவமனையில் போதிய ஆக்சிஜன் உருளைகள் இல்லாததே காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை பாஜக மூத்த தலைவரும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத் நிராகரித்து விட்டார். இந்தச் சம்பவத்தில் தவறிழைத்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்றும், தவறு செய்வதவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com