நீட் தேர்வு பற்றி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி

நீட் தேர்வு பற்றி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிப்பது ஏன்? என்றும் யாருடைய அமைச்சரவையை யார்
நீட் தேர்வு பற்றி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிப்பது ஏன்?: ப.சிதம்பரம் கேள்வி

புதுதில்லி: நீட் தேர்வு பற்றி மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளிப்பது ஏன்? என்றும் யாருடைய அமைச்சரவையை யார் கவனிக்கிறார்கள் என ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் குழந்தைகள் மரண சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டியது யார்?

குழந்தைகள் மரணத்துக்கு பொறுப்பேற்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொறுப்பானவர்கள் யாரும் இல்லையா?

நீட் தேர்வு விவகாரத்திற்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் வாக்குறுதி அளிக்கிறார். ஜிஎஸ்டி விலை மாற்றம் தொடர்பான கேள்விகளுக்கு மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் மறுப்பு தெரிவிக்கிறார்.

யாருடைய அமைச்சரவையை யார் கவனிக்கிறார்கள் என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சிதம்பரம், தமிழகத்தில் ஒருநாள் கூட, தற்போதைய ஆட்சி நீடிக்கக் கூடாது என்றும் இன்னும் 650 நாட்களில் மத்தியில் புதிய அரசு அமைய இருக்கிறது. அந்த அரசு விவசாயிகள், பொதுமக்கள் நலன் உள்ள அரசாக அமைய வேண்டும் என்றும் பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com