கர்நாடகா புதிய அணை கட்டலாம்: தமிழகம் ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் புதிய யோசனை

தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்னையும் இல்லையென்றால் கர்நாடகாவில் புதிய அணை கட்டலாம் என தமிழகம் ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, அணை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய யோசனையை அளித்துள்ளது.
கர்நாடகா புதிய அணை கட்டலாம்: தமிழகம் ஒப்புதல்; உச்ச நீதிமன்றம் புதிய யோசனை


புது தில்லி: தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்னையும் இல்லையென்றால் கர்நாடகாவில் புதிய அணை கட்டலாம் என தமிழகம் ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, அணை குறித்து உச்ச நீதிமன்றம் புதிய யோசனையை அளித்துள்ளது.

கர்நாடகாவில் அணை கட்டுவது தொடர்பான வழக்கில், கர்நாடகத்தில் அணைகள் கட்டி தண்ணீரைத் தேக்குவது தேவைப்படுகிறது. புதிய அணை மூலம் நீரைச் சேமித்து வைத்தால் தான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும். எனவே புதிய அணை கட்ட ஒப்புதல் அளிக்க  வேண்டும் என்று கர்நாடகா தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்திற்கு நீர் திறக்க புதிய அணையை கர்நாடகா ஏன் கட்டக் கூடாது? மழையின்போது கிடைக்கும் நீரை சேமித்துவைத்து கர்நாடகா, தமிழகத்துக்குத் தேவைப்படும்போது கொடுக்க புதிய அணை வழிவகுக்குமே என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழகம், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தருவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றால் கர்நாடகா புதிய அணை கட்டுவதில் எந்தத் தடையும் இல்லை. அணை காலியாக உள்ளபோது எங்களுக்கு எப்படி நீர் கிடைக்கும்? ஆனால், புதிய அணை கர்நாடகா கட்டுப்பாட்டில் இல்லாமல் பொது அமைப்பின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டதாவது, தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை உறுதி செய்வதாக இருந்தால் கர்நாடகா புதிய அணையைக் கட்டிக் கொள்ளலாம். கர்நாடகா கட்டும் புதிய அணையை 3வது தரப்பினர் அதாவது இதற்காக அமைக்கப்படும் சிறப்பு மேற்பார்வைக் குழுதான் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும். தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அணையின் பராமரிப்பு, அணையில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு போன்ற அனைத்து விஷயங்களையும் அவர்கள்தான் நிர்வகிப்பார்கள். இதுபோன்ற யோசனைகளை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் கர்நாடக மாநிலத்தில் புதிய அணை கட்டுவதற்கு நாங்கள் யோசனை சொல்வோம். 

புதிய அணை விவகாரத்தில் நாங்கள் உத்தரவிட்டால் அதை கர்நாடகா பின்பற்ற வேண்டும். அணை கட்டிய பிறகு கர்நாடகா பின்வாங்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com