மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை கட்டணம் ரூ. 2.5 லட்சம் வரை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை

செயற்கை மூட்டு உபகரணங்களின் விலையை அதிரடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை கட்டணம் ரூ.2.5 லட்சம் வரை குறையும் எனத் தெரிகிறது.
மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை கட்டணம் ரூ. 2.5 லட்சம் வரை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை

செயற்கை மூட்டு உபகரணங்களின் விலையை அதிரடியாக மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை கட்டணம் ரூ.2.5 லட்சம் வரை குறையும் எனத் தெரிகிறது.
அரசின் உத்தரவை மீறி அவற்றின் மீது அதிக விலை நிர்ணயித்தால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்த குழாய்களில் பொருத்தப்படும் 'ஸ்டென்ட்' உபகரணங்களைத் தொடர்ந்து தற்போது மூட்டு மாற்று உபகரணங்களின் விலைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை இதய அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அதிக அளவில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு தனியார் மருத்துவமனைகள் பல லட்ச ரூபாயை கட்டணமாக வசூலிக்கின்றன. குறிப்பாக, மூட்டு பகுதியில் பொருத்தப்படும் செயற்கை உபகரணத்துக்கு மட்டும் ரூ.4 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படுவதாகத் தெரிகிறது. மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கைகளுக்கு இதுவரை எந்தவிதமான வரம்புகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. இந்நிலையில், தில்லியில் சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக் கட்டணம் குறையும் என்று உறுதியளித்திருந்தார். அதை மெய்ப்பிக்கும் விதமாக, அதற்கு அடுத்த நாளே விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, செயற்கை மூட்டு உபகரணங்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,13,950 வரை மட்டுமே மத்திய அரசு விலை நிர்ணயித்துள்ளது. இனிமேல், அந்த புதிய விலையையே மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த குமார், 'இந்த நடவடிக்கையின் மூலம் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்பவர்கள் அதிகப்படியாக வழங்கும் ரூ.1,500 கோடி தொகை சேமிக்கப்படும்; இதனால், ஆண்டுதோறும் 1.5 லட்சம் நோயாளிகள் பயனடைவர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com