2019-இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
2019-இல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 'எழுச்சிமிகு வங்காளம் 2017' திட்டத்தை அவர் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து அணி அமைக்கவில்லை. இருப்பினும், அனைத்து கட்சிகளும் ஒன்றிணையும். அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிலைமை மாறும் என்றார் மம்தா. மகா கூட்டணியிலிருந்து பிகார் முதல்வர் நிதீஷ் குமார் விலகியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'நீங்கள் நிதீஷ் குறித்து நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், நான் 100 சரத் யாதவ் (ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவர்), 100 லாலு பிரசாத் (ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர்), 100 அகிலேஷ் யாதவ் (சமாஜவாதி) ஆகியோர் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com