ம.பி.யில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த
ம.பி.யில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு

மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2018) நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், தாவர் சந்த் கெலோட் ஆகியோர் மத்தியப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர்.
தலைநகர் போபாலில் செய்தியாளர்களை சந்தித்தபோது நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: மத்தியப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளிலும், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம்.
போபால் நகருக்கு அமித் ஷா வருகை தந்தது பெருமைக்குரிய விஷயம் ஆகும். இதன்மூலம், கட்சியினர் ஊக்கமடைவார்கள் என்றார் தோமர்.
தோமரும், கெலோட்டும் மத்தியப் பிரேதசத்திலிருந்து எம்.பி.க்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அமித் ஷா வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்கள் அந்த மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
அந்த மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
230 சட்டப் பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் அக்கட்சிக்கு 165 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
அதேபோல், 29 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள அந்த மாநிலத்தில் பாஜக எம்.பி.க்கள் மொத்தம் 26 பேர் உள்ளனர். எஞ்சியுள்ள 3 தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com