விரைவில் புதிய ரூ.50 நோட்டு: ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

ரிசர்வ் வங்கி விரைவில் வெளிர்நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.

ரிசர்வ் வங்கி விரைவில் வெளிர்நீல நிறத்தில் அச்சடிக்கப்பட்ட புதிய 50 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தப் புதிய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படம் ஒருபுறம் இடம்பெற்றிருக்கும். அதன் அருகில் தேவநாகரி வரி வடிவத்தில் ரூபாயின் மதிப்பும், ரிசர்வ் வங்கி என்பதைக் குறிக்கும் வகையில் ஆர்பிஐ என்ற சிறிய எழுத்துக்களும், இந்தியா என்ற வார்த்தை ஆங்கிலம் மற்றும் தேவநாகரி வரிவடிவத்தில் அச்சிடப்பட்டிருக்கும். மேலும் அசோகர் தூணின் வடிவமும், நீர் எழுத்துக்களும் அதில் இடம்பெறும்.
இந்த நோட்டுகளின் மேல்புற இடது மூலையில் வரிசை எண்கள் சிறிதில் இருந்து பெரிதாவது போன்றும், நோட்டுகளின் கீழ்ப்புற வலது மூலையில் அந்த எண்கள் பெரிதில் இருந்து சிறிதாவது போன்றும் அச்சிடப்பட்டிருக்கும்.
மறுபுறத்தில், நமது கலாசாரப் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் தேருடன் கூடிய ஹம்பி நகரின் படம் இடம்பெற்றிருக்கும். மேலும், தூய்மை இந்தியா திட்டத்தின் வாசகத்துடன் கூடிய இலச்சினை, இந்திய மொழிகளில் 50 ரூபாய் என்ற வாசகம் ஆகியவையும் இடம்பெறும். மேலும், இந்த நோட்டுகள் 135 மி.மீ. நீளமும், 66 மி.மீ. அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும்.
ரிசர்வ் வங்கி இதற்கு முன்பு வெளியிட்ட 50 ரூபாய் நோட்டுகளும் சட்டரீதியில் செல்லுபடியாகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com