கோரக்பூர் சுற்றுலாத் தலம் அல்ல: யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்ததையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் பொழுதுபோக்கிற்கான சுற்றுலாத்தலம் அல்ல என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கோரக்பூர் சுற்றுலாத் தலம் அல்ல: யோகி ஆதித்யநாத்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்ததையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் பொழுதுபோக்கிற்கான சுற்றுலாத்தலம் அல்ல என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 71 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மருத்துவமனையில் பிராண வாயு உருளை (ஆக்சிஜன் சிலிண்டர்) பற்றாக்குறை காரணமாகவே இந்தக் குழந்தைகள் இறக்க நேரிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ராகுல் காந்தி, கோரக்பூருக்கு சனிக்கிழமை வந்தார்.
அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், கோரக்பூரில் தூய்மைப் பணி பிரசாரத் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
தலைநகர் லக்னௌவில் உள்ள இளவரசருக்கும் (சமாஜவாதி தலைவர் அகிலேஷ்), தில்லியில் உள்ள இளவரசருக்கும் (ராகுல் காந்தி) தூய்மைப் பணி பிரசாரத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அவர்கள் கோரக்பூரை உல்லாசப் போக்கிடமாக்க மாற்ற முயற்சிக்கிறார்கள். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கோரக்பூர் மக்களுக்கு யாரேனும் சவால் விடுத்தால் அவர்களே முன்வந்து கொடிய கிருமிகளை ஒழிக்கத் தேவையான தூய்மைப் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.
முந்தைய அரசுகள் அடிப்படை வசதிகளைக் கூட அரசியல் லாபத்துக்காக செய்துதராமல் விட்டுவிட்டன. தற்போது, மூளை அழற்சி நோய் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் யோகி ஆதித்யநாத்.
காங்கிரஸ் பதிலடி: இதனிடையே, முதல்வர் யோகியின் கருத்துக்கு அந்த மாநில காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறியதாவது:
கோரக்பூர் விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் யோகி ஆதித்யநாத் மேற்கொள்ளவில்லை. மாறாக, நடந்த சம்பவத்தை திசைதிருப்ப அவர் முயற்சிக்கிறார்.
இதுபோன்ற அற்பமான காரணங்களைத் தெரிவித்து அவருடைய பதவியை சிறுமைப்படுத்திக் கொள்கிறார். ராகுல் வருகையால் கோரக்பூர் சம்பவத்துக்கு நீதி கிடைப்பது உறுதியாகிவிடும் என்பதைக் கண்டு யோகி ஆதித்யநாத் பீதி அடைந்துவிட்டார் என்றார் ராஜ் பப்பர்.
கொலை நடந்த இடம் கோரக்பூர்-சிங்வி: கோரக்பூர் உல்லாசப்போக்கிடம் அல்ல; கொலை நடந்த இடம் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார்.
"கோரக்பூரை பொழுது போக்கிடம் அல்ல என்று கூறி மலிவான அரசியலில் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற கருத்துகள் மூலம் உயிரிழந்த குழந்தைகள் தொடர்பாக நடைபெற்றுவந்த விவாதத்தைக் குறைக்க அவர் முயற்சிக்கிறார்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com