நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்பும் பொறுப்பை ஏற்கத் தயார்: அஞ்சல் துறை

மகாராஷ்டிரத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளை உரியவரிடம் வழங்கும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த மாநில அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
நீதிமன்ற அழைப்பாணைகளை அனுப்பும் பொறுப்பை ஏற்கத் தயார்: அஞ்சல் துறை

மகாராஷ்டிரத்தில் நீதிமன்ற அழைப்பாணைகளை உரியவரிடம் வழங்கும் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக அந்த மாநில அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மகாராஷ்டிர அஞ்சல் வட்டத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிமன்ற அழைப்பாணைகளை, உரியவர்களிடம் வழங்கும் பொறுப்பை ஏற்பது தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினோம். இறுதியாக, அந்தப் பொறுப்பை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம் மேற்கொண்டு வழங்கும் அறிவுறுத்தலின்படி செயல்படுவோம்.
தற்போதைய நடைமுறைப்படி, காவல்துறையினர் நேரடியாகச் சென்று உரியவர்களிடம் அழைப்பாணைகளை வழங்குகின்றனர். அஞ்சல் துறையினர் அந்த பொறுப்பை ஏற்கும் பட்சத்தில், காவல்துறையினரின் பணிச் சுமை குறையும்.
இதுபோன்ற நடைமுறையை, தில்லி மற்றும் ஒடிஸா மாநில உயர் நீதிமன்றங்கள் ஏற்கெனவே பின்பற்றி வருகின்றன. நீதிமன்ற அழைப்பாணைகளை பட்டுவாடா செய்யும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கென பிரத்யேக உறையைத் தயார் செய்வதுடன், அழைப்பாணைகளை உரியவர்களிடம் வழங்குவது குறித்து அஞ்சல் துறை ஊழியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்படும் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com