பாஜக 50 ஆண்டுகள் ஆட்சி புரியும்: அமித் ஷா

பாஜக வெறும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்காக மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது ஆள்வதற்கே வந்துள்ளதாகவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
பாஜக 50 ஆண்டுகள் ஆட்சி புரியும்: அமித் ஷா

பாஜக வெறும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்காக மட்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றும் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது ஆள்வதற்கே வந்துள்ளதாகவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அவர் நாடு தழுவிய அளவில் 110 நாள் சுற்றுப்பயணத்தை தற்போது மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக மூன்று நாள் பயணமாக மத்தியப் பிரதேசத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார். தலைநகர் போபாலில் பாஜக தலைமையகத்தில் கட்சியின் மையக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்டோரை அமித் ஷா சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் தற்போது நாம் 330 எம்.பி.க்களோடு, பெரும்பான்மை அரசை நடத்தி வருகிறோம். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நமது கட்சிக்கு 1,387 எம்எல்ஏக்கள் உள்ளனர். கட்சி தற்போது அதன் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், மேலும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாக அர்ப்பணிப்பு மிக்க தொண்டர்கள் கருதுகின்றனர்.
பாஜக வெறும் 5 அல்லது 10 ஆண்டுகளுக்காக மட்டும் ஆட்சிக்கு வரவில்லை. குறைந்தபட்சம் 50 ஆண்டுகளாவது நாட்டை ஆள்வதற்கே வந்துள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் ஆட்சி அதிகாரத்தின் மூலம் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானத்தோடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
நமது தலைவர்களின் கடினமான உழைப்பு, அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றின் காரணமாகவே பாஜக பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த இயக்கத்தை வலுப்படுத்துவதற்காக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்த பல்வேறு மூத்த தலைவர்களால்தான் பாஜக தற்போது 12 கோடி தொண்டர்களைக் கொண்ட கட்சியாக உள்ளது. நாட்டில் நமது கட்சிக் கொடி இல்லாத இடமே இல்லை என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இதற்கு, நமது கட்சி அமைப்பை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும்.
நன்னடத்தைதான் நமது இயக்கத்தின் அடிப்படையாகும். நாட்டில் (வடக்கில் இருந்து தெற்காக) காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், (கிழக்கில் இருந்து மேற்காக) அஸ்ஸாமின் காமரூப் முதல் குஜராத்தின் கட்ச் வரையிலும் அனைத்து வாக்குச்சாவடி மட்டத்திலும் பாஜக இருப்பதை கட்சித் தொண்டர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமித் ஷா பேசினார்.
இத்தகவல், பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com