50 ஆண்டுகள் பாஜக ஆட்சி: அமித் ஷா எப்போது ஜோதிடரானார்?

மத்தியில் 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்திருப்பதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்திருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், அவர் எப்போது ஜோதிடம் பார்க்கும் பணியைத் தொடங்கினார்?
50 ஆண்டுகள் பாஜக ஆட்சி: அமித் ஷா எப்போது ஜோதிடரானார்?

மத்தியில் 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் நீடித்திருப்பதற்கு பாஜக இலக்கு நிர்ணயித்திருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில், அவர் எப்போது ஜோதிடம் பார்க்கும் பணியைத் தொடங்கினார்? என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் விமர்சித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியபோது, மத்தியில் 5 அல்லது 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க பாஜக வரவில்லை என்றும், குறைந்தது 50 ஆண்டுகளாவது ஆட்சியில் இருக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கோலாபூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த சரத்பவாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஜோதிட சேவையை அமித் ஷா பார்க்கத் தொடங்கியுள்ளார் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. எப்போது முதல் இந்த வேலையை அவர் செய்து வருகிறார்? ஆட்சியில் எத்தனை நாள்கள் ஒருகட்சி நீடித்திருக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் தேர்வு செய்யப்பட தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர் அவருக்கு ஆதரவாக வாக்களித்ததே காரணமாகும். இதனால்தான், மாநிலங்களவைக்கு அகமது படேலால் செல்ல முடிந்தது என்றார் சரத் பவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com