ரூ.5 லட்சம் மதிப்பில் காவலர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்!

குஜராத்தைத் தொடர்ந்து தற்போது கொல்கத்தா காவலர்களுக்கும் ஐந்து 750சிசி ஹார்லி டேவிட்ஸன் வாகனத்தை அரசு வழங்கியுள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பில் காவலர்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்!

குஜராத்தைத் தொடர்ந்து தற்போது கொல்கத்தா காவலர்களுக்கும் ஐந்து 750சிசி ஹார்லி டேவிட்ஸன் வாகனத்தை அரசு வழங்கியுள்ளது.

அமெரிக்காவைச் சார்ந்த ஹார்லி டேவிட்ஸன் நிறுவனம் 1903-ம் ஆண்டு துவங்கப்பட்டு கடந்த 114 ஆண்டுகளாக உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அனைவரும் விரும்பும் வகையில் வாகனங்களைத் தயாரித்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பில் மிகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனமாகக் கருதப்படுவது இந்த நிறுவனத்தைச் சேர்ந்த வாகனங்கள்தான். காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹார்லி டேவிட்ஸன் 750சிசி பைக்கின் இந்திய விலை ரூ.5.05 லட்சம் ஆகும். 

இந்த வாகனம் முக்கியமாக அணிவகுப்பு மற்றும் விழாக்களில் உபயோகிக்கப்படும் என்று கொல்கத்தா போக்குவரத்து துணை ஆணையர் சாலமன் நேசகுமார் கூறியுள்ளார். பொதுவாகப் போக்குவரத்து காவலர்கள் வாகனத்தில் இருக்க வேண்டிய சிவப்பு மற்றும் நீலம் ஒளி விளக்குகளும், சைரன் ஒலியும் இதில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com