உ.பி., பிகாரில் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு

உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீட்பு மற்றும் நிவாரண உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள். இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து
வெள்ளத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மீட்பு மற்றும் நிவாரண உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள். இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் இருந்து

உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
நாட்டின் வடக்கு, வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. அண்டை நாடான நேபாளத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அதையொட்டி அமைந்துள்ள உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் மழை - வெள்ள பாதிப்புச் சம்பவங்களில் இதுவரை 69 பேர் உயிரிழந்து விட்டதாக அந்த மாநில நிவாரண ஆணையர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள், தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஎஆர்எஃப்), மாநில ஆயுதப்படை போலீஸின் வெள்ள மீட்புப் படை ஆகியவை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன.
எனினும், நேபாளத்தில் இருந்து உற்பத்தியாகி வரும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழை ஆகியவை மீட்புப் பணிகளுக்கும், மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கும் இடையூறை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிகாரில்...: இதேபோல், பிகார் மாநிலத்தில் மழை-வெள்ள பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 253-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் 1.26 கோடி பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இருந்து 4.21 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 1,358 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 2,569 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய உணவுக் கூடங்களில் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகின்றன.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ராணுவ வீரர்கள் ஆகியோர் மீட்புப் படகுகளில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
நிதீஷ் ஆய்வு: இந்நிலையில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு சம்பரண், சிதாமர்ஹி, சேவ்ஹர், முசாஃபர்பூர், பாட்னா ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
மேற்கு வங்கத்தில்...: மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில், கடந்த 3 நாள்களாக மழை பெய்யாததால், மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. பல இடங்களில் வெள்ளம் வடிந்து வருவதால், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்படிருந்தவர்கள், தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக, பேரிடர் மேலாண்மை அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com