சோனியா, ராகுலை இன்று சந்திக்கின்றனர் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 43 பேர் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளனர்.

தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 43 பேர் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளனர்.

இந்த 43 எம்எல்ஏக்களில், சக்திசிங் கோஹில் உள்ளிட்ட 4 எம்எல்ஏக்கள், தில்லிக்கு சனிக்கிழமை சென்றனர்.
எஞ்சிய 39 எம்எல்ஏக்களும் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றனர். அவர்கள் அனைவரும், தில்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை திங்கள்கிழமை சந்திக்கவுள்ளனர்.
39 எம்எல்ஏக்களுடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி, பிற கட்சி மூத்த தலைவர்களும் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஆமதாபாத் விமான நிலையத்தில் சோலங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலங்களவைத் தேர்தலில் மூத்த தலைவர் அகமது படேலை வெற்றி பெறச் செய்தபிறகு, கட்சியின் தலைமையைச் சந்திக்க வேண்டும் என்று எங்கள் கட்சி எம்எல்ஏக்கள் விரும்பினர். இதனால், அவர்களை தில்லிக்கு அழைத்து செல்கிறோம்' என்றார்.
குஜராத் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தல் குறித்து கட்சித் தலைமையுடன் அவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அகமது படேலின் பிறந்த தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சியிலும் 43 எம்எல்ஏக்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com