நாட்டின் பன்முக கலாசாரத்தை காக்க எதிர்க்கட்சிகள் குழு

நாட்டின் பன்முக கலாசாரத்தைக் காக்கும் வகையில் ஒரு குழுவை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன.

நாட்டின் பன்முக கலாசாரத்தைக் காக்கும் வகையில் ஒரு குழுவை எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளன.
14 எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி தலைவர் சரத் யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.
இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, சமஜவாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் வீர் சிங், திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் சுகேந்து சேகர் ராய், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தாரிக் அன்வர், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா, ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் ஜெயந்த் செளதரி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்கள் ஹேமந்த் சோரன், பாபு லால் மராண்டி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மாநில அளவிலும் எதிர்க்கட்சிகள் சார்பில் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சரத் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியடைந்த சரத் யாதவ், எதிர்க்கட்சிகளுடன் கைகோத்துள்ளார். முன்னதாக, தேசத்தின் பன்முக கலாசாரத்தை காப்பது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தையும் சரத் யாதவ் நடத்தினார். இதில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com