புதிய இந்தியாவை உருவாக்க ஓய்வின்றி பணியாற்றுங்கள்: பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களிடம் மோடி வலியுறுத்தல்

2022- ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவதற்கு ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி
தில்லியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர்.
தில்லியில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர்.

2022- ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கும் கனவை நனவாக்குவதற்கு ஓய்வின்றி பணியாற்ற வேண்டும் என்று பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் தில்லியில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் 12 முதல்வர்கள் மற்றும் 6 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் பேசியதாவது:
2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற கனவை நிஜமாக்குவதற்கு அனைவரும் ஓய்வின்றி பணியாற்ற வேண்டும். ஏழைகள் நலத் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதுடன், அரசு நிர்வாகங்களில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
ஒ.பி.சி. ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து கொடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா, மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பினால் முடங்கிக் கிடக்கிறது. இது காங்கிரஸ் கட்சியின் ஒ.பி.சி. சமூகத்தினருக்கு எதிரான நிலையையும், ஏழைகளுக்கு எதிரான போக்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜக தலைவர்கள் வரும் மாதங்களில் பிரசாரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் ஊழலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அரசு உதவித் தொகைகளை பீம் செயலி மூலமாக அளித்தல் வேண்டும். 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகள், பிற கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநில அரசுகளுடன் கலாசார பகிர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்து கொள்ள வேண்டும். இது, ஒரே இந்தியா, சிறந்த இந்தியா உருவாக வழிவகுக்கும். பாஜக ஆளும் மாநில அரசுகளின் செயல்பாடுகளை 3 மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்வோம் என்று பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பேசினர்.
இந்தத் தகவலை கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com