புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: உறுதி செய்தது மத்திய அரசு

சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்: உறுதி செய்தது மத்திய அரசு


புது தில்லி: சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்கு முக்கியத்துவம் தரும் வகையில், புதிதாக அச்சிடப்பட்டு வரும் 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் இறுதி வாரத்திலோ அல்லது செப்டம்பர் முதல் வாரத்திலே ஆர்பிஐ வெளியிட இருக்கிறது.

இந்த தகவல், மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதாவது, ஆர்பிஐயின் மத்தியக் குழு இயக்குநர்கள் அளித்த பரிந்துரையின்படி, புதிதாக 200 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து வெளியிடப்பட உள்ளன. விரைவில் இந்த நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

500 ரூபாய் நோட்டுக்கு அடுத்து 2000 ரூபாய் நோட்டு மட்டுமே இருப்பதால் சில்லறை பெறுவதிலும், கொடுப்பதிலும் சிக்கல் இருந்தது. எனவே தற்போது 200 ரூபாய் நோட்டுகள் வெளியானால் பணப்புழக்கம் எளிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள், சமூக விரோதிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், அதனை நீக்கிவிட்டு, குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டும் புழக்கத்தில் விட மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்தன. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. 

இதையடுத்து, உடனடியாக பண மதிப்பிழப்பு செய்யும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய அரசும் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதோடு, புதிய வடிவிலான 50 ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி அச்சடித்து வருவதாக புகைப்படங்கள் வெளியாகின. விரைவில் அது குறித்த அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com