சிறையில் இருந்து சசிகலா ஓசூர் எம்எல்ஏ இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார்: ரூபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா, அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார் என அடுத்தக் குற்றச்சாட்டு கிளம்பிய
சிறையில் இருந்து சசிகலா ஓசூர் எம்எல்ஏ இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார்: ரூபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு


பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலர் வி.கே. சசிகலா, அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்துள்ளார் என அடுத்தக் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

கர்நாடக மாநில காவல்துறை துணை ஆய்வாளர் டி. ரூபா, அம்மாநில ஊழல் தடுப்பு வாரியத்திடம் அளித்துள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அதாவது, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலா, சிறைக்கு அருகில் உள்ள ஓசூர் எம்எல்ஏவின் இல்லத்துக்குச் சென்று வந்திருப்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய சிறைச்சாலையின் முக்கிய நுழைவாயிலிலும், கேட் ஒன்று மற்றும் கேட் இரண்டிலும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளே இதனை உறுதிபடுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
 

பெங்களூர் சிறைச்சாலையின் முன்னாள் டிஐஜியாக இருந்த ரூபா, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வி.கே. சசிகலாவுக்கு, சட்டவிதிகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுவதாக முதன் முதலாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரூபா அளித்துள்ள அறிக்கையில், சட்டத்துக்குப் புறம்பாக சிறையில், கைதி ஒருவருக்கு சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் துறைத் துறை அதிகாரிகள் மாநில உள்துறை மற்றும் செயலருக்கு தவறான தகவல்களை அளித்து வருகின்றனர் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையின் முக்கிய நுழைவாயில் வழியாக சாதாரண ஆடையில் சசிகலாவும், இளவரசியும் சிறைக்குள் வரும் காட்சிகள் அடங்கிய பதிவு சமூக தளங்களில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com