ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற மத்திய அரசு பரிசீலனையா?: அருண் ஜேட்லி மறுப்பு

புதிய ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.
ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற மத்திய அரசு பரிசீலனையா?: அருண் ஜேட்லி மறுப்பு

புதிய ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி புதன்கிழமை தெரிவித்தார்.
மேலும், புதிய ரூ.200 நோட்டுகள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பதை ரிசர்வ் வங்கியே முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.
பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி வாபஸ் பெறப்பட்டதையடுத்து, புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்த சூழலில், ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படலாம் என்று யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது, ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேட்லி, அதுபோன்ற பரிசீலனைகள் எதுவும் நடைபெறவில்லை என்றார்.
அவர் மேலும் கூறுகையில், '200 ரூபாய் நோட்டுகளை எப்போது அச்சிடுவது, எப்போது வெளியிடுவது என்பது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் ரிசர்வ் வங்கியே மேற்கொள்கிறது. எனவே, அந்த நோட்டுகள் வெளியிடப்படும் தேதியை ரிசர்வ் வங்கி அறிவிப்பதுதான் முறையானது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com