மாநிலங்களவை உறுப்பினர்களாக அமித்ஷா, ஸ்மிருதி இராணி பதவியேற்பு

மாநிலங்களவை உறுப்பினர்களாக பாஜக-வின் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்களாக அமித்ஷா, ஸ்மிருதி இராணி பதவியேற்பு

குஜராத்தின் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக சார்பில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

காங்கிரஸ் சார்பில் அகமது படேல் போட்டியிட்டார். பெரும் பரபரப்புகளுக்கு இடையே இம்மூவரும் மாநிலங்களவை உறுப்பினராக வெற்றிபெற்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக பாஜக-வின் அமித்ஷா மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வெள்ளிக்கிழமை பதிவியேற்றனர்.

இவர்களுக்கு குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு பதிப்பிரமாணம் செய்து வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் இதுவரை 5 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ள அமித்ஷா, தற்போது முதன்முறையாக மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அவரது வருகை பாஜக-வுக்கு பலம் சேர்க்கும் என்று அக்கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com