காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள், 2
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பாதுகாப்புப்படை வீரர்கள் காயம்

புல்வாமா: காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று காலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள், 2 போலீஸார் காயமடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே கடந்த இரு மாதங்களில் பலமுறை பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை சுமார் 4:30 மணியளவில் புல்வாமா மாவட்ட எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், 4 மத்திய பாதுகாப்பு படை வீரரும், மற்றொரு போலீஸாரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் தங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com