பஞ்ச்குலாவில் கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்.
பஞ்ச்குலாவில் கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்.

பஞ்ச்குலாவில் கலவரம்: காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம்

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத்

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து  பஞ்ச்குலாவில் நிகழ்ந்த வன்முறையை அடுத்து காவல் துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில், தேரா சச்சா சௌதா என்ற மத அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹரியாணா மற்றும் பஞ்சாபின் பல்வேறு இடங்களில் அவரது ஆதரவாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை பயங்கர கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 32 பேர் உயிரிழந்ததுடன், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

முன்னதாக, இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி, பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை சுற்றி ராணுவத்தினரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். பஞ்ச்குலா, தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள சிர்சா உள்ளிட்ட நகரங்களிலும், பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

எனினும், கடந்த 4 நாள்களாகவே குர்மீத்தின் ஆதரவாளர்கள், குறிப்பாக பெண்கள் பஞ்ச்குலாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியானதும், பஞ்ச்குலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அப்போது, ஊடகங்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான வாகனங்களுக்குத் தீவைத்த வன்முறையாளர்கள், போலீஸார் மீது கற்களையும் கம்புகளையும் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, வானத்தை நோக்கி சுட்டும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் முயன்றனர். இதனால், பஞ்ச்குலா நகரமே போர்க்களமாக மாறியது.

வன்முறை சம்பவங்களில் 32 பேர் உயிரிழந்ததாகவும், 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் மாநில அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்ச்குலா மட்டுமின்றி சிர்சா உள்ளிட்ட இதர பகுதிகளிலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. சிர்சாவில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்ச்குலாவில் நிகழ்ந்த வன்முறையை அடுத்து காவல் துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டபோதும், மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது தில்லிக்கும் பரவிய தேரா சச்சா சீடர்களின் வன்முறை வெறியாட்டத்தால், ரயில், 2 பேருந்துகள் தீ வைக்கப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com