நிர்பந்தத்தின் காரணமாகவே நிதீஷை முதல்வராக்கினேன்

மகா கூட்டணி தலைமையிலான ஆட்சியின்போது நிர்பந்தத்தின் காரணமாகவே நிதீஷ் குமாரை பிகார் முதல்வராக்கினேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
நிர்பந்தத்தின் காரணமாகவே நிதீஷை முதல்வராக்கினேன்

மகா கூட்டணி தலைமையிலான ஆட்சியின்போது நிர்பந்தத்தின் காரணமாகவே நிதீஷ் குமாரை பிகார் முதல்வராக்கினேன் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.
பிகாரில் மகா கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மீண்டும் மகா கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்னாவில் ஆர்ஜேடி சார்பில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது.
அதில் பங்கேற்று லாலு பிரசாத் பேசியதாவது:
மகா கூட்டணி தலைமையிலான ஆட்சியின்போது பிகார் முதல்வராக நிதீஷ் குமாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று நான் விரும்பவில்லை.
ஐக்கிய ஜனதா தளத்தின் தற்போதைய அதிருப்தி தலைவர் சரத் யாதவும், சமாஜவாதி கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் யாதவும் நிர்பந்தம் செய்த காரணத்தினாலேயே நிதீஷ் குமாரை முதல்வராக்க சம்மதித்தேன் என்றார் லாலு பிரசாத்.
இந்தப் பேரணியில் சரத் யாதவ், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
சோனியா, ராகுல், மாயாவதி பங்கேற்கவில்லை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை. அவர்களின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், சி.பி.ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் பேரணியில் பங்கேற்கவில்லை.
சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட உரைகள் மைக் மூலம் பேரணியில் ஒலிபரப்பப்பட்டன.
பேரணியில் மற்ற கட்சிகளின் தலைவர்களும் பேசினர்.
மம்தா பானர்ஜி: வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை காரணமாக பாஜக தோல்வியைச் சந்திக்கும். பாஜகவுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்.
சரத் யாதவ்: நாட்டில் உள்ள 125 கோடி மக்களின் நன்மைக்காக மகா கூட்டணியை மீண்டும் உருவாக்க பாடுபடுவேன். எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 43 வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன். அவரை (நிதீஷ்) கண்டு நான் அஞ்சமாட்டேன். மக்களின் நலனுக்கான எனது போராட்டம்
தொடரும்.
இந்தப் பேரணியில், குலாம் நபி ஆஸாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கிப் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com