சிக்கிம்: குருத்வாராவை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை

சிக்கிம் மாநிலத்தில் குருத்வாராவை இடிக்கும் பணிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் குருத்வாராவை இடிக்கும் பணிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அம்ரித் பால் சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
சிக்கிம் மாநில அதிகாரிகள் மறுசீரமைப்பு என்ற பெயரில் சீக்கிய மத வழிபாட்டுத் தலமான குருத்வாராவை இடித்து வருகின்றனர். அங்கிருந்த புனித நூலையும் அகற்றியுள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த கட்டடத்தை இடிக்க உடனடியாகத் தடைவிதிக்க வேண்டுமென்று கோரியிருந்தார்.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமிதவா ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'குருத்வாராவை இடிக்கும் பணியை சிக்கிம் மாநில அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அங்கு இப்போதுள்ள நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். 
மனுதாரர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம். 
அதுவரை குருத்வாராவில் எவ்வித மறுசீரமைப்பு, இடிக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது' என்று உத்தரவு பிறப்பித்தது.
மாநில அரசு அதிகாரிகள் அங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் ஒரு மாதத்துக்கு முன்பே குருத்வாராவில் உள்ள மதத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com