பணம் எனக்கொரு பொருட்டல்ல: முகேஷ் அம்பானி

தனது வாழ்க்கையில் பணம் ஒரு பொருட்டே இல்லை என ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பணம் எனக்கொரு பொருட்டல்ல: முகேஷ் அம்பானி

பல துறைகளின் தலைவர்கள் பங்குபெறும் 15-ஆவது கருத்தரங்கம் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் போது ரிலையன்ஸ் நிறுவன அதிபரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானி கலந்துகொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:

எனது வாழ்க்கையில் பணம் பெரிய பொருட்டே இல்லை. நான் எப்போதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. பணம் என்பதைக் கொண்டு எனது வியாபாரத்தை பெருக்கும் ஒரு பொருளாகவே இப்போது வரை பயன்படுத்தி வருகிறேன். 

நான் செய்யும் தொழிலை விரிவுபடுத்த மட்டுமே அது எனக்கு உதவியது. மேலும் அதனை விரிவுபடுத்தவும், மேற்கொண்டு அதில் எழும் புதிய சவால்களைச் சந்திப்பதற்கும், வியாபாரம் தொடர்பான அச்சுறுத்தல்களை களைவதற்கும் பணம் உதவியுள்ளது.

ஆனால் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நான் எப்போதும் பணத்தை நம்பி இல்லை. இன்னும் சொல்லப்போனால் எனது பள்ளிப்பருவம் முதலே நான் எனது சட்டைப்பையில் பணம் வைத்துக்கொள்வது இல்லை. அந்த வாடிக்கை இன்று வரை தொடர்கிறது. என்னிடம் கிரெடிட் கார்டுகளும் கிடையாது.

இப்போது வரை நான் செய்யும் செலவுகளுக்கு என்னுடன் இருப்பவர் தான் பணம் செலுத்தி வருகிறார். ஒருவேளை அதுகூட நான் இவ்வளவு பணம் சேமித்தமைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று நகைச்சுவையுடன் தனது பேச்சை முடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com