பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் அதிகபட்சமாக ரூ.33 ஆயிரம் கோடி மதிப்பிலான 249 லட்சம் டன் நெல் சனிக்கிழமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணாவில் ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் 249 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப்பில் இருந்து 179 லட்சம் டன்னும், ஹரியாணாவில் இருந்து 70.5 லட்சம் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டவை. இது கடந்த காலங்களை விட அதிகளவாகும்.

பஞ்சாப் விற்பனை மற்றும் பண்டக காப்பக நிலையத்தில் இருந்து அரசு சார்பில் 98.5 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதர சதவீதம் விற்பனையாளர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.33,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் கோடி விவசாயிகள் மற்றும் கமிஷன் ஏஜென்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் 69.56 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. இந்த கொள்முதல் நடப்பாண்டில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹரியாணா மாநிலம் முதன்முறையாக 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பின்னர் இத்தனை பெரிய கொள்முதல் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும்.

கடந்த அக்டோபர் 1-ந் தேதி துவங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை இந்த கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. இதில் இதுவரை மட்டும் பஞ்சாப்பில் இருந்து 168 லட்சம் டன் மற்றும் ஹரியாணாவில் இருந்து 58.96 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

இரண்டு மாநிலங்களிலும் நடைபெற்ற இந்த நெல் கொள்முதல் ஒரு சாதனை நிகழ்வாகும். இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் இருப்பதாக ஹரியாணா அரசின் உணவு, விவசாயம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் கரண் தேவ் கம்போஜ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com