காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல்! 

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த ராகுல்! 

புதுதில்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி 1998-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருகிறார். இதன் மூலம் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தவர் என்ற பெருமைக்கு உரியவராக உள்ளார். 

அவருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். தற்பொழுது மேலும் உடல் நல பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சோனியா காந்தி, கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்வதில்லை. எனவே ராகுல் காந்தி அக்கட்சித் தலைவராக விரைவில் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று கூறப்பட்டது.

அதன் முதல் படியாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று  வேட்பு மனு தாக்கல் செய்தார். அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மனுதாக்கல் நிகழ்ச்சியின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் கமல்நாத், மோதிலால் வோரா, ஷீலா தீக்ஷித், அஹமது படேல் மற்றும் அசோக் கெலாட் போன்றோர் உடன் இருந்தனர்.

மனுத் தாக்கலுக்குப் பிறகு தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்த்துக்களை ராகுல் காந்தி பெற்றுக் கொண்டார். வேறு யாரும் மனுத் தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் ராகுலின் வெற்றி உறுதியான ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com