ஆதார், பான் எண் பெற்ற லஷ்கர் பயங்கரவாதி

பிகார் மாநிலத்தில் கடந்த வாரம் கைதான லஷ்கர்}ஏ}தொய்பா அமைப்பின் பயங்கரவாதி, ஆதார் எண், நிரந்தர வருமான வரி கணக்கு எண் (பான் எண்) பெற்றிருப்பது, தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில்

பிகார் மாநிலத்தில் கடந்த வாரம் கைதான லஷ்கர்}ஏ}தொய்பா அமைப்பின் பயங்கரவாதி, ஆதார் எண், நிரந்தர வருமான வரி கணக்கு எண் (பான் எண்) பெற்றிருப்பது, தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், ஒüரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல் நயீம் (27), கடந்த 2015}ஆம் ஆண்டு, பிகார் மாநிலம், கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரானிசெüக் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். தனது பெயரை சுஹைல் கான் என்று மாற்றிக் கொண்டு, அங்கு ஆங்கிலப் பயிற்சி மையம் நடத்தி வந்தார். அந்த மையத்தின் வாயிலாக, அங்குள்ளமுஸ்லிம் இளைஞர்களை மூளைச்சலவை செய்து, பயங்கரவாத அமைப்பின் ஸ்லீப்பர்களை செல்களை உருவாக்கி வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, போலியான ஆவணங்களைச் செலுத்தி, ஆதார் எண், பான் எண் ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார். இதுதவிர, பிகாரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் எம்.ஏ. பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். அதைத் தொடர்ந்து, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்தார். அந்த கடவுச் சீட்டு, வீட்டு உரிமையாளரின் முகவரிக்கு வந்தது. அந்த கடவுச்சீட்டு, வீட்டு உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, காவல் துறையில் அவர் புகார் கொடுத்தார். அதை அறிந்துகொண்ட நயீம், அங்கிருந்து தலைமறைவானார்.
அதையடுத்து, அவரை வாராணசியில் நவம்பர் 28}ஆம் தேதி, என்ஐஏ அமைப்பினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இருந்து, மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com