வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேஜரிவால் வலியுறுத்தல்

வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வில் பங்கேற்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

"நகர டாக்ஸி-2017' திட்டம் தில்லி அரசால் மிக விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 
இத்திட்டம் வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு அனுமதிக்கப்படமாட்டாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். 
இது தொடர்பாக தனது சுட்டுரையில் (ட்விட்டர்) கேஜரிவால் கூறியிருப்பதாவது: "சவாரிப் பகிர்வு நல்லதொரு திட்டமாகும். இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். 
அறிமுகமில்லாத பயணிகளுடன் பயணிப்பது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com